சந்திர வம்சம்:
வைவசுவதமனுவின்
மனைவி சிரத்தை. இவளுக்கு இக்ஷூவாகு மகன் உட்பட மொத்தம் 10 மகன்கள். ஆனால் ஒரு
பெண்மகள் வேண்டுமென்று ஆசை. அளை என்னும் பெண்ணை பெற்றுக் கொள்கிறாள்.
ஆனால் கணவன்
வைவசுவதமனுவுக்கு அதுவும் ஆண்மகனாக இருக்க வேண்டும் என்று விருப்பம். தன் குரு
வசிஷ்டரிடம் இந்த மகளை மகனாக ஆக்கித்தரும்படி கேட்கிறார். அவரும் அவ்வாறே அந்த
பெண்ணை ஆணாக ஆக்கித் தருகிறார்.
அந்த ஆண் வேட்டைக்குப் போகும்போது, காட்டில்
பார்வதிதேவியின் நீச்சல் குளத்தில் குளிக்கிறான். பார்வதிக்கு கோபம். நீ, பெண்ணாக
ஆகக்கடவது என்று சாபம் இடுகிறார். அவன் பெண்ணாகிறான்.
அந்த பெண்ணைப் பார்த்து
ஆசைப்பட்டு புதன் அவளுடன் உறவு வைத்து புரூரவன் என்பவனைப் பெற்றெடுக்கிறாள். இந்த
புரூரவன் வம்சம்தான் சந்திர வம்சம். இந்த பெண் ஒருமாதம் ஆணாகவும், மறு மாதம்
பெண்ணாகவும் மாறி விடுவானா(ளா)ம். இந்த வரத்தை சிவன் இவனுக்கு (இவளுக்கு)
கொடுத்தாராம்.
No comments:
Post a Comment