வேதம்:
சுருதி எனப்
பெயர். இவை நான்கு.
ரிக் வேதம்,
யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம்.
எல்லா
வேதங்களும் ஞான காண்டம் கர்ம காண்டம் என இரண்டு பிரிவுகளை கொண்டதாக இருக்குமாம்.
ஞான காண்டமானது
பிரம்மத்தை சொல்வதாம். இதுவே உபநிஷதம் என்கிறார்கள்.
கர்மகாண்டம்
இந்திரன் முதலிய தேவர்களை பூஜை செய்து வணங்குவதைப் பற்றி சொல்கிறதாம்.
இந்த வேதங்களை
ரிஷிகள் ஏற்படுதிதனார்களாம். பின்னர் துவாபர யுகத்தில் உதித்த கிருஷ்ணத்துவைபாயனர்
என்கிற வியாசர் ஏற்படுத்தியதுதான் இப்போதுள்ள இந்த நான்கு வேதங்களும்
என்கிறார்கள்.
இந்த நான்கு
வேதங்களும், மந்திரம், பிராமணம் என்னும் இரண்டு பிரிவாக உள்ளதாம்.
மந்திரம் என்பது
தேவதைகளை தியானிக்கும் சொற்களை கொண்டதாம்.
பிராமணம் என்பது
இந்த மந்திரங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சொல்கிறதாம்.
No comments:
Post a Comment