வியாசர்:
இவரின் பெயர்
கிருஷ்ணத்துவைபாயனர். இவர், பராசரர் என்ற
முனிவருக்கும், சத்தியவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். நான்கு வேதங்களை
இவர்தான் வகுத்தவர். வேதங்களை வகுத்தவர் என்பதால் இவருக்கு வியாசர் என்று பெயர்
வந்ததாம். இந்த வேதங்களுக்கு சூத்திரமும் இவரே எழுதினாராம். மகாபாரதக் கதையை இவர்
சொல்லச் சொல்ல விநாயகர் அவரின் ஒரு தந்தத்தை ஒடித்து அதை எழுதுகோலாகக் கொண்டு
இடையில் நிறுத்தாமல் எழுதினாராம்.
வியாசர்,
கங்கையில் உள்ள ஒரு தீவில், ஒரு மீனவப் பெண்ணான சத்தியவதிக்கு பிறந்ததால் அந்த
தீவின் பெயரைக் கொண்டு இவருக்கு "துவைபாயனர்" என்று வைத்தார்களாம்.
(துவீபம் என்றால் தீவு; அயனர் என்றால் அதில் பிறந்தவர் என்று பொருளாம்).
இந்த
சத்தியவதிதான், பின்னர் அஸ்தினாபுரத்து மன்னரை திருமணம் செய்து, மகாபாரதக் கதையின்
முக்கிய நாயகியும் ஆகிறார்.
No comments:
Post a Comment