Tuesday, August 4, 2015

கலியுகம்

யுகங்கள் நான்கு. இதை சதுர்யுகம் என்கிறார்கள்.

கிருதயுகம் (34,56,000 வருடங்கள்)
இதில் பாதி திரேதயுகம் (17,28,000 வருடங்கள்)
இதில் பாதி துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)
இதில் பாதி கலியுகம் (4,32,000 வருடங்கள்)
ஆக மொத்தம் நான்கு யுகங்களும் சேர்த்து 64,80,000 வருடங்கள்.

இதுமாதிரி ஆயிரம் சதுர்யுங்கள் (1000x64,80,000 = 648,00,00,000) மனித வருடங்கள் முடிந்தால், இது பிரம்மாவுக்கு ஒரு பகல் பொழுதாம். அதேமாதிரி காலம் ஒரு இரவு. இப்படியாக 1000 பகல் இரவுகள் (பிரம்மாவின் பகல் இரவுகள்) கழிந்தால் பிரம்மாவுக்கு ஒரு வருடமாம்.
(மனிதனுக்கு 365 நாட்கள் ஒரு வருடம்; பிரம்மாவுக்கு கோடியில் கணக்கு).

நல்லவர்கள் கெட்டவர்களின் எண்ணிக்கை இவ்வாறு இருக்குமாம்.
கிருதயுகத்தில் தர்ம தேவதை நான்கு பங்கு இருக்குமாம்.
திரேத யுகத்தில் மூன்று பங்கு தர்ம்மும், ஒரு பங்கு கெட்டதும் நடக்கும்.
துவாபர யுகத்தில் பாதி தர்மம், மீதி பாதி கெட்டதும் நடக்குமாம்.
கலியுகத்தில் முக்கால் பாகம் கெட்டவர்களும். ஒரு கால் பங்கு நல்லவர்களும் இருப்பார்களாம்.


No comments:

Post a Comment