திருக்கோகர்ணம்:
சிவபக்தனான இராவணன், சிவனின் இருப்பிடமான கைலாசம் சென்று, சிவனைக் கெஞ்சி அவனிடமிருந்து சிவலிங்கத்தைப் பெற்று அதை பூஜித்து வந்தான். அந்த லிங்கத்தை கீழே வைக்காமல் அதற்கு பூஜைகள் செய்து வந்திருக்கிறான்.
ஒருநாள், அவன் குளிக்கச் செல்லும்போது, அதை ஒரு அந்தணன் கையில் கொடுத்து கீழே வைக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு குளிக்கச் செல்கிறான். அந்த அந்தணன்தான் விநாயகர். விநாயகர் மாறுவேட்டதில் அந்தணன்போல வந்திருக்கிறார்.
விநாயகர் அந்த லிங்கத்தை தரையில் வைத்துவிடுகிறார். திரும்பவந்து பார்த்த இராவணன், அதை கையில் எடுக்கிறான், முடியவில்லை. தன் இருபது கைகளாலும் பலம் கொண்டமட்டும் இழுத்துப் பார்க்கிறான், முடியவில்லை.
அந்த லிங்கமானது, பசுவின் காதுமடலில் இருக்கும் வளையம்போல, வேர்விட்டு பூமிக்கு அடியில் நன்றாக புதைந்துவிட்டது. அதை இழுக்க முடியாமல், இவ்வளவு பலம் எப்படி வந்தது என்று திகைத்து விட்டுவிடுகிறான்.
கோ என்றால் பசு, அந்த பசுவின் காதுமடல் கர்ணம் போல சுற்றி வேர்விட்டு இருந்த லிங்கம் என்பதால், இதை "கோ-கர்ணம்" என்று அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment