Friday, August 21, 2015

களித்தின்று போவென்றேன்

கொடிபோன்ற இடையுடைய தோழிகளே!

நேற்று ராத்திரி நித்திரை செய்யும்போது ஒருவன் வந்து என் கையைப் பிடித்தான். நான் அவன், யாரோ அயலூர் (வெளியூர்) என்று ஐயமுற்றுப் பிடித்த கையை விடு என்றேன்; அவன் விடமாட்டேன் என்றான்; அவன் என்னைத் தணியச் செய்ய (அமைதிப்படுத்த) கஞ்சி குடி என்பது போல கஞ்சிகுடி என்று சொன்னான். 

காஞ்சியில் வசிக்கும் ஏகாம்பரநாதன்தான் என்று நான் தெரிந்துகொண்டு, என்னை சேர்ந்து என்னை சுகித்துப் போ என்று (என்னுடன் இருந்துவிட்டுப்போ என்று) சொல்வதாக களிதின்று போ என்றேன்.

அதைக்கேட்ட அவனோ, தான் கஞ்சிகுடி என்றதற்குப் பதிலாக கேலியாகத்தான் நான் அவனைக் களிதின்று போ என்று சொன்னதாக நினைத்துக் கொண்டு, உடனே மாயாமாய் மறைந்து போய்விட்டான்.

"நேற்றிரா வந்தொரு வனித்திரையிற் கரைபிடித்தான்
வேற்றூரா னென்று விடர்யென்றேன் -- ஆற்றியே
கஞ்சி குடியென்றான் களித்தின்று போவென்றேன்
வஞ்சியரே சென்றான் மறைந்து.'
-- காளமேகப்புலவரின் பாடல்.

No comments:

Post a Comment