Monday, August 3, 2015

ஆட்டுக் குட்டி

ஆட்டின் பொதுப்பெயர்: அருணம், செம்மறி, மோத்தை, அசம், உதள், உடு, கொச்சை, துருவை, ஏழகம், வற்காலி, துள்ளல், பள்ளை, வெள்ளை, வருடை, மேடம் (மேஷம்), கடா, மை, மறி, வெறி, கொறி, சாகம், பருவை, தகர்.

செம்மறியாட்டின் பெயர்: துருவை, மை, கொறி.
ஆண் செம்மறியாட்டின் பெயர்: தகர், கடா, திண்ணகம், ஏழகம், கம்பளம்.
ஆட்டுக் குட்டியின் பெயர்: குட்டன், சோரன், மறி, பறழ்.
வெள்ளாட்டின் பெயர்: வெள்ளை, வற்காலி, கொச்சை.
வெள்ளாட்டுக் குட்டியின் பெயர்: வெள்ளை.
ஆண் வெள்ளாட்டின் பெயர்: செச்சை, சாகம், மோத்தை.

வரையாட்டின் பெயர்: சரபம், வருடை.

No comments:

Post a Comment