மீமாம்சை
பால்
வெண்மையானது. வெண்மை என்பது பால் போன்றது. வெண்மை எல்லோமே பாலாகுமா? பால் என்பது
வெண்மை மட்டும்தானா? பால் என்பது ஒரு பொருள். வெண்மை என்பது ஒரு குணம்.
அப்படியென்றால், பொருள்களால் குணம் வருகிறதா? அல்லது குணங்களால் பொருள்
உருவாகிறதா? இது ஒரு வெட்டியான ஆராய்ச்சி போலத் தோன்றினாலும்,
ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவே முக்கியமான ஆராய்ச்சியாம்.
இந்த பிரபஞ்சம்
என்பது பொருள்களால் ஆனதா? அல்லது குணங்களின் தொகுப்புத்தான் இந்தப் பொருளா? இந்த அடிப்படைப்
பொருள்களான பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், இவைகள்
எதிலிருந்து தோன்றி இருக்கும்? இவற்றின் அடிப்படை பொருள் அணுக்களால் ஆனவை.
அவற்றைப் பிரிக்க முடியாது. கண்ணுக்கு தெரியாதது. இதுதான் நியாய வைசேடிகர் கொள்கை.
ஆனால் மீமாம்சை
கொள்கை உடையவர்கள் என்ன சொல்கிறார்கள்? அணுக்கள் கண்ணுக்கு தெரிவதில்லை என்றோ,
அவைகளுக்கு பருமன் இல்லை என்றோ நம்புவதில்லை. அவர்களின் கொள்கைப்படி, அவ்வாறு
கண்ணுக்குத் தெரியாத அணுக்கள் ஒன்று இரண்டு மூன்று கூடிச் சேர்ந்து கண்ணுக்கு
புலப்படும் பொருளாகத் தெரியும் அதை அணு என்போம் என்று அவர்களின் கொள்கையை
வகுத்துக் கொண்டார்கள்.
இப்படிச் சொல்லிக் கொள்ளும் மீமாம்ணர்கள்
பிரம்மத்தைப் பற்றி ஏதும் சொல்லவில்லையாம். அவர்கள் ஆத்திகரா, நாத்திகரா என்று
தெரியவில்லை என்றே சிலர் குறிப்பிடுகிறார்கள். இந்த கொள்கையைக் கொண்ட முதன்மையாளர்
சைமினி அவர்களும் அவரின் நூலில் இறைவனைப் பற்றி ஏதும் சொல்லவில்லையாம்.
கடவுளைச்
சொல்லவில்லை என்பதால் மீமாம்சகர்களை நாத்திகர் என்று சொல்லக்கூடாது என்று டாக்டர்
இராதாகிருஷ்ணன் சொல்கிறார். சைமினி கடவுளைப் பற்றி குறிப்பிடாவிட்டாலும் அந்த
மதத்தைச் சேர்ந்தவர்கள் கடவுள் என்று ஒருவர் தேவையில்லை என்றும் சொல்லிச்
சென்றுள்ளார்களாம்.
No comments:
Post a Comment