பரிமேலழகர்:
"பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ நூலிற்
பரித்தவுரையெல்லாம் பரிமேலழகன்
றெரித்தவுரையாமோ தெளி."
பரிமேலழகர் காஞ்சிபுரத்துக்காரர் என்று பலர் சொல்கிறார்கள். சிலர், இவரை பாண்டிய நாட்டில் பிறந்தவர் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இவர் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர்.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பலர். இவர்களில் சிறந்த உரையை எழுதியவர்கள் என்று கருதப்படுவர்கள் இரண்டு பேர்கள். ஒன்று, நச்சினார்க்கினியர், மற்றவர் இந்த பரிமேலழகர்.
ஒவ்வொருவரும் திருக்குறளுக்கு உரை எழுதும் போது, அவரவர் சார்ந்த மதத்தைக் கொண்டே அதன் கருத்துக்களை சொல்லியுள்ளனராம். நச்சினிக்கினியனார் எழுதிய உரையில் திருக்குறள் ஒரு பொதுநூல் என்றே கருதி உரை எழுதியுள்ளாராம்.
பரிமேலழகர் தியானத்தில் இருந்து, திருக்குறளின் உண்மைப் பொருளைத் தியானத்தில் கண்டு, அதற்கு உரை எழுதியதாகச் சொல்கிறார்கள். எனவே இவரின் உரையில் பொருள் வன்மையும், செஞ்சொற்சிறப்பும், இலக்கணத்தைக் கூறும் சாதுரியமும், சிறப்பான உரை தெரிவிக்கும் ஆற்றலும், மேற்கோள்களை எடுத்து சித்தாந்தம் செய்யும் வகையும், வடமொழிச் சொற்களை செம்மொழியாக்கும் அற்புத சாமர்த்தியமும், முத்தமிழ் பரப்பெல்லாம் முற்றுணர்ந்த நுண்புலமையும் நன்கு விளங்குமாம்.
No comments:
Post a Comment