நான்கு வகை புலவர்கள்
கவி, கமகன், வாதி, வாக்கி என நான்கு வகை புலவர்கள் உண்டு.
கவி = ஆசு கவி, மதுர கவி, சித்திர கவி, வித்தார கவி என்ற நான்கு வகை கவிகளையும் மிகச் சிறப்பாக கவி பாடுபவர்.
கமகன் = அரும் பொருட்களை செம் பொருளாக காட்டி விவரிக்கும் புலவர்.
வாதி = ஏதாவது மேற்கோளை எடுத்துக் காட்டி வாதித்து பிறரின் கொள்கையை மறுக்கும் புலவர்.
வாக்கி = அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் யாவரும் விரும்பி கேட்குமாறு எந்த குற்றமும் இல்லாமல் கூறும் புலவர்.
ஆசுகவி = சபையிலே, திடீரென்று கொடுக்கப்பட்ட ஒரு பொருளைப் பற்றி பாட்டு, அடி முதலிய அமைத்து உடனே பாடல் புலவர்.
மதுரகவி = பொருள் சிறப்பும், சொற்சிறப்பும், தொடையும், உருவகமும் முதலிய அலங்காரங்களும், ஓசையும் தோன்றும்படி பாடல் பாடும் புலவர்.
சித்திரகவி = மாலைமாற்று, சுழிகுளம், ஏகபாதம், சக்கரவகை ஏழுகூற்றிருக்கை, பாதமயக்கு, பாவின்புணர்ப்பு, ஒற்றெழுத்து இல்லாப்பாட்டு, ஒரு பொருள்பாட்டு, சித்திரப்பா, விசித்திரப்பா, வினாவுதரம், ஓரெழுத்துப்பாட்டு, ஓரினப்பாட்டு, காதைகரப்பு, கரந்துறைப்பாட்டு, கோமூத்தரி, கூடசதுர்த்தம், சருப்பதோபத்திரம், என்பவற்றையும், எழுத்தும் எழுத்தின் வர்க்கமும், உதாரணமும் நோக்கிப் பாடும்படி வடநூல்களில் வைத்த இறைக்கவிகளும், பிறவும் பாடும் புலவர்.
வித்தாரகவி = மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மடலூர்தல், மறம், கலிவெண்பா, பாசண்டத்துறை, இயல் இசை நாடகம் ஆகியவற்றை விரித்து பாடும் புலவர்கள்.
No comments:
Post a Comment