யானையின் பெயர்:
தும்பி,
மாதங்கம், தூங்கல், தோல், கறையடி, எறும்பி, உம்பல், வாரணம், புழைக்கை, ஒருத்தல்,
வல்விலங்கு, நாகம், ரும்பி, நால்வாய், பூட்கை, குஞ்சரம், கரேணு, அத்தி, வேழம்,
உவா, கயம், களிறு, கைம்மா, சிந்துரம், வயமா, இபம், புகர்முகம், தந்தி, மதாவளம்,
தந்தாவளம், வழுவை, ஆம்பல், மந்தமா, மருண்மா, மதகயம், போதகம்.
தலைமை
யானையின்பெயர்: யூத்நாதன்,
யானை வாலின்
பெயர்: தாலவட்டம்.
யானையின் வால்
நுனியின் பெயர்: வேசகம்.
யானை முதுகின்
பெயர்: மஞ்சு.
யானை
மத்தகத்தின் பெயர்: மதகம், கும்பம்.
யானை மதத்தின்
பெயர்: கடம், கடாம், தானம்.
யானை கொம்பின்
நடுவின் பெயர்: பிரதிமானம்.
யானை தந்தத்தின்
பெயர்: கோடு, எயிறு.
யானை
கடைக்கண்ணின் பெயர்: நிரியாணம்.
யானை காது
அடியின் பெயர்: சூளிகை.
யானை துதிக்கை
உமிழ்நீரின் பெயர்: விலாழி.
யானை பல்லின்
அடியின் பெயர்: கரீரம்.
யானை முன்
காலின் பெயர்: அபரம்.
யானை
துதிக்கையின் பெயர்: தொண்டை, தொண்டலம், சுண்டை.
யானை கன்றின்
பெயர்: கயந்தலை, போதகம், துடியடி, களபம், கயமுனி.
யானை
படுகுழியின் பெயர்: பயம்பு.
யானை நோயின்
பெயர்: பாகலம்.
No comments:
Post a Comment