Monday, August 3, 2015

ஈன்ற பசு

பசுவின் பெயர்:
கூலம், கோ, குடம், சுரபி, ஆ, நிரை, தேனு, பெற்றம்.
தெய்வப் பசுவின் பெயர்: கபிலை, தேனு.
மலட்டுப் பசுவின் பெயர்: வசை.
பசுவின் கன்றின் பெயர்: வற்சம்.
ஈன்ற பசுவின் பெயர்: வற்சலை.
ஒரு ஈற்றுப் பசுவின் பெயர்: கிட்டி.
நற்பசுவின் பெயர்: பத்திரை.
பசுவின் காம்பின் பெயர்: சுரை.
பசுவின் முலைமடியின் பெயர்: செருத்தல், ஆபீனம்.
பசுக் கூட்டத்தின் பெயர்: நிரை, தொறு, காலி, கோட்டம், காலேயம்.

எருதின் பெயர்: பாலல், சே, பெற்றம், பூணி, பாண்டில், கொட்டியம், இறால், ஏறு, மூரி, புல்லம்.
எருமையின் பெயர்: காரான், வடவை, மேதி, சைரிபம், கவரி, காரா, மூரி, மகிடம்.
ஆண் எருமையின் பெயர்: கடா, பகடு.

மலட்டு எருமையின் பெயர்: மை.

No comments:

Post a Comment