பிரகஸ்பதி:
பிரம்மமானச புத்திரருள் ஒருவர் அங்கிரசன். அந்த அங்கிரசனின் மகன்தான் வியாழன் என்னும் குரு என்னும் பிரகஸ்பதி. இந்த பிரகஸ்பதி தேவர்களின் குருவாம். மகா புத்திசாலியும்கூட. இந்த பிரகஸ்பதியின் மனைவி பெயர் தாரை.
பிரகஸ்பதி மனைவியான தாரை மீது சந்திரன் ஆசைப்பட்டு அந்த பெண்ணை கடத்திக் கொண்டு போய் வாழ்ந்திருக்கிறான் இந்த சந்திரன். அவ்வாறு வாழ்ந்த காலத்தில் சந்திரனுக்கும் இந்த தாரைக்கு பிறந்தவன்தான் புதன் என்கிறார்கள். புதன் வழி வாரிசுகள்தான் சந்திரவம்ச வாரிசுகளாம்.
தாரை இருக்கும் இடத்தை அவள் கணவன் பிரகஸ்பதி கண்டுபிடித்து, அவளைக் கடத்தி வைத்திருக்கிற சந்திரனுடன் போர் புரிகிறான். பெரிய போராம். பிரகஸ்பதிக்கும் சந்திரனுக்கும் மிகப் பெரிய போர். பிரமதேவர் பஞ்சாயத்து செய்கிறார். பிரமதேவர் சந்திரனை சந்தித்து, பிரகஸ்பதி மனைவி தாரையை பிரகஸ்பதியிடமே விட்டுவிடும்படி சந்திரனைக் கேட்டுக் கொள்கிறார். பிரமதேவர் பெரிய ஆள். அவர் சொல்லை மதித்து, சந்திரன் தாரையை விட்டுவிடுகிறான். தாரை மறுபடியும் வந்து அவள் கணவன் பிரகஸ்பதியிடம் வாழ்கிறாள்.
பிரகஸ்பதி இருக்கும் மண்டலம் பொன்மயமான மண்டலமாம். இந்த மண்டலத்தில் வேறுவகையான மனிதர்கள் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அந்த பிரகஸ்பதி மண்டலத்தில் இருக்கும் மனிதர்கள் மிகச் சிறந்த அறிவு உடையவர்களாம். பிரகஸ்பதியும் மிகுந்த அறிவாளியே. விஞ்ஞானிகளும் அவர்களின் இடைவிடாத ஆராய்ச்சியில், இந்த பிரகஸ்பதி மண்டலத்தில் அறிவுடைய மானிடர்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கருதுகிறார்களாம். இந்த பிரகஸ்பதி மண்டலம் பூமியைவிட பல மடங்கு பெரியதாக இருந்தாலும், மிக மிக லேசானதாம். அங்கு வசிப்பர்களும் லேசாகவே இருப்பார்களாம். இவர்களைத்தான் புராணங்கள் "தேவகணத்தினர்" என்று கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment