Monday, August 3, 2015

விசுவாமித்திரர்

விசுவாமித்திரர்:

புரூரவனின் வம்சத்தில் உதித்தவர் இந்த விசுவாமித்திரர். காதி என்பவரின் மகன். இவர் பிராமணர் அல்லர். இவர் ஒரு க்ஷத்திரியர். இருந்தாலும், இவர் தனது தவ வலிமையால் பிராமணர் ஆனாராம்.  அவ்வாறு இருந்ததால், இவரை, வசிஷ்டர், பிராமணர் என்று ஏற்றுக் கொள்ள மறுத்தாராம். எனவே அந்த வசிஷ்டர முனிவர் மீது கோபம் கொண்டு, அவரின் நூறு மகன்களையும் கொன்றார் இந்த விசுவாமித்திரர். 

திரிசங்கு என்ற மன்ன்ன் உயிருடன் இருக்கும்போதே சொர்க்கம் செல்ல ஆசைப்பட்டான். ஆனால் தேவர்கள் அனுமதிக்கவில்லை. கீழே பூமிக்கும் வர முடியவில்லை. அப்போது, இந்த விசுவாமித்திரர் தன் தவ வலிமையால், அந்தரத்தில் (சொர்க்கத்துக்கும் பூமிக்கும் நடுவில்) ஒரு அந்தரத்தில் ஒரு சொர்க்கதை ஏற்படுத்தி, அதை அந்தர சொர்க்கம் என்று சொல்லி, அங்கு திரிசங்குவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் இவர். 

அரிச்சந்திரன் சத்தியவானாக இருக்க செய்தவர் இவரே. இந்த விசுவாமித்திரருக்குத்தான், மேனகை என்னும் பெண் மூலம் சகுந்தலை என்னும் மகள் பிறக்கிறாள். இந்த சகுந்தலை கதையை கவி காளிதாசன் மிக சிறப்பாக சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளான்.

No comments:

Post a Comment