கந்தரலங்காரம்-13
ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரனுடை மணிசேர்
திரு அரைக் கிங்கிணி ஓசை படத் திடுக்கிட்ட அரக்கர்
வெருவரத் திக்குச் செவிபட்டு எட்டு வெற்புங்
கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே.
(ஒருவரான சிவனை பக்கத்தில் வைத்துள்ளவளின்
குமாரனுடைய மணிகள் சேர்ந்த அவனின் அழகிய
இடையில் கிங்கிணியின் ஒலியோசை வெளிப்பட்டபோது, திடுக்கிட்ட அரக்கர், வெருண்டு,
திக்குகளில் உள்ளவர் செவிடுபட, எட்டு வெற்பு என்னும் மலைகளும், கனக பருவரைக்
குன்றும் அதிர்ந்தன; இதனால் தேவர்கள் பயமும் நீங்கி விட்டது). அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம்.
ஒருவரைப் பங்கிலுடையாள் குமாரனுடை மணிசேர்
திருவரைக் கிங்கிணியோசை படத்திடுக்கிட்டரக்கர்
வெருவரத் திக்குச் செவிபட்டெட்டு வெற்புங் கனகப்
பருவரைக் குன்றுமதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே.
(கந்தரலங்காரம்-13)
No comments:
Post a Comment