Saturday, February 20, 2016

மகாகணபதி

மகாகணபதி துதி
(மகாகவி பாரதியார் பாடியது)

கற்பக விநாயகக் கடவுளே போற்றி
சிற்பர மேனத் தேவன் வாழ்க
வாரண முகத்தான மலர்த்தாள் வெல்க
ஆரண முகத்தான் அருப்பதம் வெல்க
படைப்புக் கிறையவன்! பண்ணவர் நாயகன்.

இந்திர குரு! என் இதயத் தொளிர்வான்
சுந்திர மவுலித் தலைவன் மைந்தன்!
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்!
குணமதிற் பலவாம் கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும் அகக்கண் ஒளிதரும்
அக்கினி தோன்றும்! ஆண்மை வலிவுறும்
திக்கெலாம் சென்று ஜெயக்கொடி நாடடலாம்!
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகையதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்
அச்சமும் தீரும்! அமுதும் விளையும்!
வித்தை வளரும்! வேள்வி ஓங்கும்
அமர்த் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம் இஃதுணர் வீரே!
**


No comments:

Post a Comment