கந்தரலங்காரம்-39
உதித்து ஆங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து என்னை
உன்னில் ஒன்றா
விதித்து ஆண்டருள் தரும் காலமுண்டோ வெற்பு
நட்டுரக
பதித்தாம்பு வாங்கி நின்ற அம்பரம் பம்பரம் பட்டு
உழல
மதித்தான் திருமருகா மயிலேறிய மாணிக்கமே.
(பிறந்து இந்த மண்ணில் உழல்வதையும், பின்னர் சாவதையும் நீங்கி,
என்னை உன்னுடன் ஒன்றாக ஆக்கிக் கொண்டு, அருள்
தரும் காலம் வருமா? வெற்பு மலையை கொண்டு, பாம்பை கயிறாகக் கொண்டு, அம்பரத்தையே பம்பரமாக
சுழற்றிய திருமாலின் மருமகனே! மயில் வாகனத்தில் ஏறிய மாணிக்கமே! )
உதித்தாங் குழல்வதுஞ்சாவதுந்தீர்த்
தெனையுன்னிலொன்றா
விதித்தாண் டருடருங்காலமுண்டோ வெற்புநட்டுரக
பதித்தாம்புவாங்கி நின்றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் றிருமருகா மயிலேறிய மாணிக்கமே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 39)
No comments:
Post a Comment