Friday, February 26, 2016

கந்தரலங்காரம்-11

கந்தரலங்காரம்-11

குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குளம்பக்
கசையிடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின் கொத்
தசை படு கால்பட்டு அசைந்தது மேரு வடியிட எண்
திசைவரை தூள்பட்டவத் தூளின் வாரி இடர்ப்பட்டதே.

(குசை என்னும் கடிவாளம் நெகிழா வெற்றி வேலனின் அவுணர்கள் (அசுரர்கள்) குடல் குளம்ப, கசை என்னும் சவுக்கால் அடித்த வாசி என்னும் குதிரை எப்படி வேகம் கொண்டு ஒடுமோ அதுபோன்ற வேகத்தில் ஓடிய பீலி என்னும் மயிலின் இறகுகள் அடித்துக் கொள்ளும்போது மேரு மலையே அசைகிறது; மயில் தன் காலை எடுத்து வைக்கும்போது, எட்டு திசைகளிலில் உள்ள மலைகள் குலுங்கி தூள்கள் பறக்கின்றன; அதனால் கடலே மண் மேடாகி விட்டது;)

குசைநெகிழா வெற்றிவேலோனவுணர் குடர்குளம்பக்
கசையிடு வாசிவிசை கொண்ட வாகனப் பீலியின் கொத்
தசை படு கால்பட்டசைந்தது மேருவடியிடவெண்
டிசைவரை தூள்பட்டவத் தூளின் வாரிதிடர்ப்பட்டதே.
(கந்தரலங்காரம்-11)


No comments:

Post a Comment