கர்மா (Karma) என்பது என்ன
கிருஷ்ணா?
அர்ச்சுனா! ஏதாவது ஒரு முடிவை நீ எடுத்தாக வேண்டும்; ஒன்று, சண்டை
போடுவது; மற்றொன்று சண்டையிலிருந்து விலகிக் கொள்வது; இந்த சண்டையில் எதிரிகள்
தோற்று நாம் வெற்றி பெறுவோமா அல்லது நாம் தோற்று, எதிரிகள் வெற்றி பெறுவார்களா
என்று தெரியாது; நாம் உயிருடன் இருப்போமா என்றுகூடத் தெரியாது;
“என் உறவினர்களை கொன்றுவிட்டு நாம் எப்படி நிம்மதியாக வாழ்வேன்” என்று
நீயோ கவலைப்படுகிறாய்! துக்கத்துக்கு அருகதை அற்றவர்களுக்காக, நீ துக்கப்படுகிறாய்;
You grieve for those who
are not worthy of grief. அறிவில்
சிறந்தவர்கள், உயிருடன் இருப்பவர்களைப் பற்றியோ, இறந்தவர்களைப் பற்றியோ சிறிதும்
கவலை கொள்ள மாட்டார்கள்;
இதற்குமுன் இந்த மண்ணை ஆண்ட காலத்தில் நானும் இங்கு இருந்த்தில்லை,
நீயும் இங்கு இருந்த்தில்லை; இனி வரும் காலங்களில், நானும் இங்கு இருக்கப்
போவதுமில்லை; அதுபோல நீயும் இங்கு இருக்கப் போவதுமில்லை; There was never a time when these
monarchs, you, or I did not exist; nor shall we ever cease to exist in the
future.
நம்மில் இருக்கும் ஆன்மா தான், இந்த சிறு உடம்பை எடுத்து குழந்தையாக
இருந்தது; வாலிபனாக இருக்கிறது; வயோதிகனாக மாறுவோம்; பின்னர் இறப்போம்; இந்த ஆன்மா
இந்த இறந்த உடலை விட்டு சென்றுவிடும்; மறுபடியும் வேறு உடல் எடுத்துப் பிறக்கும்; The soul acquires another body after
death. இந்த உடல் உயிருடன் இருக்கும்போது, அதன்
புலன்களால் குளிரை உணர்ந்தோம், வெப்பச் சூட்டை உணர்ந்தோம்; வலியை உணர்ந்தோம்;
ஆனந்தத்தை உணர்ந்தோம்; ஆனால் அவைகள் எங்கு சென்றன; ஆம், அவைகள் சிறிது நேரத்தில்
மாறும் தன்மை கொண்டவைகள்; நிலைத்து நிற்காது;
ஆனால், இந்த உடலில் வாழும் “ஆத்மா” அப்படிப்பட்டதல்ல; நிலைத்து வாழும்
தன்மை கொண்டது; எல்லாவற்றையும் உணர்ந்து அனுபவித்து தன்னுள்ளே இருத்தி வைத்துக்
கொள்ளும் நிரந்தர தன்மை உடையது; அது இந்த மண் உலகில் மட்டுமல்ல, எல்லா உலகிலும்
நிரந்தரமாக வாழும் தன்மை கொண்டது; ஆம், ஆன்மா என்பது அழியாத் தன்மை கொண்டது
அர்ஜூனா! அதனால்தான், மனிதன் தன் உடையை மாற்றிக் கொள்வது போலவே, ஆன்மா அது வந்து
இருந்த உடம்பை மாற்றிக் கொள்கிறது; அடுத்தடுத்த பிறவிகளில் புதுப்புது உடல்களைத்
தேடிக் கொள்கிறது;
அர்ஜூனா! பிறந்தவன் எல்லோருமே இறக்கத்தானே வேண்டும்? உடல் அழிவது
கட்டாயம்தானே? அப்படி என்றால், இறந்தவன், மறுபடியும் பிறப்பதும் கட்டாயம்தானே? O Arjuna! You should not grieve like
this. Because death is certain for the one who is born, and birth is certain
for the one who dies. Therefore, you should not lament over the inevitable. நடந்தே தீரும் என்ற பிறப்பு இறப்பைப் பற்றி நீ எதற்காக கவலைப்
படுகிறாய்? கவலைப் பட்டாலும், கவலைப்படா விட்டாலும் பிறப்பு, இறப்பு நடந்தே
தீரும்.
அர்ஜூனா! நீ இந்தப் போரில் இறக்க நேரிட்டால், நீ உன் கடமையைச் செய்ததற்காக
சொர்க்கம் போவாய்; இங்குள்ள மனிதர்கள் உன்னை வாழ்த்தி புகழுவர்; மாறாக, நீ, இந்தப்
போரில் வெற்றி பெற்றால், இந்த நாடே உனக்கு கிடைக்கும்; ஓ அர்ஜூனா! எப்படிப்
பார்த்தாலும் இரண்டிலுமே உனக்கு பலன்தான் கிடைக்கப் போகிறது; ஆனால், போர் வேண்டாம்
என்று விலகினால், நீ ஏதோ பயந்து தோற்று ஓடிவிட்டதாக இந்த உலகமே உன்னை சபிக்கும்;
அதனால் உனக்கு பாபம் வந்து சேரும்;
கர்மாவைப் பற்றிக் கூறுகிறேன், கவனமாகக் கேள் அர்ஜூனா!
சுயநலமில்லா சிறிய சேவை என்னும் இந்த கர்மா, உன்னை நிரந்தரமாக
வாட்டும் இந்த மரண பயத்திலிருந்து விடுவித்தேவிடும்; பிறப்பு இறப்பு என்ற தொடர்பை
அறுத்துவிடும்; நீ செய்யும் எல்லா செயல்களையும் எந்தவித விருப்பு வெறுப்பு இல்லாமல்
செய்துவா; அதில் கிடைக்கும் பலனை நினைத்து காரியத்தை செய்யாதே; பலன் நினைத்துச்
செய்யும் காரியம் எதுவும் கர்மா அல்ல; அது உன் ஆசைக்காகச் செய்வது; ஒரு செயலைச்
செய்வதால், என்ன முடிவு வரும் என்று எதிர்பாத்துச் செய்வது கர்மா அல்ல; முடிவு
எதுவாகவேனும் இருக்கட்டும்; அந்த முடிவு என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது அல்லது
சந்தோஷப்படுத்தாது அல்லது துக்கப்படுத்தாது என்று நினைத்துக் கொண்டு அந்தக்
காரியத்தை செய்வதே கர்மா; அதாவது நீ செய்யும் காரியத்தில் முயற்சி கவனம் செயல்
இருக்க வேண்டும், ஆனால் அதன் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்று முன்கூட்டியே நீ
கவலைப்படாதே; Do your
duty to the best of your ability, O Arjuna, with your mind attached to the
Lord, abandoning worry and selfish attachment to the results, and remaining
calm in both success and failure.
பலனை நினைக்காமல், காரியத்தை மட்டுமே செய்பவன் கர்ம-யோகி ஆவான்;
அவனுக்கு மறுபிறப்பு இருக்காது; அதாவது, அவனின் ஆன்மா, பிறந்து, இறந்து,
மறுபடியும் பிறக்கும் பிழைப்பைச் செய்யாது; பரமாத்மா என்னும் இறைநிலைக்குள்
சென்றுவிடும்; Karma-yogis
are free from the bondage of rebirth due to renouncing the selfish attachment
to the fruits of all work, and attain blissful divine state of salvation or
Nirvana.
உன்னுடைய அறிவு, பல குழப்பத்திலிருந்து மீண்டு தெளிவு பெற்றால்,
இறைநிலையை அடையும்;
No comments:
Post a Comment