கந்தரலங்காரம்-14
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடும் ஐவரிற் கொட்படைந்த
இப் பாச நெஞ்சனை ஈடேற்றுவாய் இரு நான்கு வெற்பும்
அப் பாதியாய் விழ மேருங் குலுங்க விண்ணாரும் உய்யச்
சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடைச் சண்முகனே.
(இந்தக் குப்பாச வாழ்க்கையில் கூத்தாடும் ஐவரான
ஐம்புலன்களும் சுழன்று திரிகின்ற இந்த பாச நெஞ்சினை ஈடேற்றவாய்! (நீ சப்பாணி கை கொட்டியபோது)
இரு நான்கான மொத்தம் எட்டு வெற்பு மலைகளும், பாதி பாதியாய் விழ, மேரு மலையும்
குலுங்க, விண்ணார்களான தேவர்களும் உய்ய, சப்பாணி கொட்டிய கைகள் ஆறிண்டு ஆக மொத்தம்
பன்னிரண்டு உடைய சண்முகனே!!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம்-14).
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடுமைவரிற் கொட்படைந்த
விப்பாச நெஞ்சனை யீடேற்றுவாயிரு நான்கு வெற்பு
மப்பாதியாய் விழமேருக்குலுங்க விண்ணாரு முய்யச்
சப்பாணி கொட்டியகையாறிரண்டுடைச் சண்முகனே.
(கந்தரலங்காரம்-14)
No comments:
Post a Comment