கந்தரலங்காரம்-21
மரண ப்ரமாத நமக்கில்லையாம் என்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலும் உண்டே கிங்கிணி முகுள
சரண ப்ரதாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரண க்ருபாகர ஞானாகர சுர பாஸ்கரனே.
(மரணம் என்னும் அபாயம் நமக்கில்லையாம்; என்றும்
(எப்போதும்) வாய்த்த துணையாக கிரண ஒளியை உடைய கலாபி என்னும் மயிலும் வேலும்
இருக்கின்றன; கிங்கிணி சலங்கை ஒலிக்கின்ற சரண பிரதாபனே, சசிதேவியின் (இந்திரன்
மனைவியின்) மாங்கல்யத்தை தந்து (காப்பாற்றி) ரட்சித்தவனே! பரண கிருபை என்னும்
கருணைக்கு உரியவனே, ஞானம் என்னும் அறிவு கரங்கள் கொண்ட வடிவானவனே, சூரியனைப் போன்ற
பாஸ்கரனே!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-21
மரணப்ரமாத நமக்கில்லையாமென் றும்வாய்த்்ததுணை
கிரணக்கலாபியும் வேலுமுண்டே கிங்கிணிமுகுள
சரணப்ரதாப சசிதேவிமங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ருபாகர ஞானாகரசுரபாஸ்கரனே.
(கந்தரலங்காரம்-21)
No comments:
Post a Comment