Saturday, February 20, 2016

சௌகந்திகம் மலர்

சௌகந்திகம் மலர்
குபேரனின் நந்தவனத்தில் இந்த சௌகந்திக மலர்கள் நிறைந்த தடாகம் உள்ளது;
ஒருநாள், குபேரனின் இந்த நந்தவனத்தில், காற்று வேகமாக வீசுகிறது; அப்போது ஒரேயொரு சௌகந்திகம் மலர் மட்டும் அந்தக் காற்றில் பறந்து சென்று, பூமியில் வசிக்கும் திரௌபதையின் மடியில் விழுகிறது; அவள் அந்த சௌகந்திக மலரை எடுத்துப் பார்க்கிறாள்; பூமியில், இதுவரை இப்படிப்பட்ட ஒரு அழகான மலரை பார்த்ததில்லையே என வியக்கிறாள்; இது பூமியில் எங்கு முளைத்திருக்கிறது என்று தெரியவில்லையே என்று தவிக்கிறாள்;
உடனே பீமனை அழைக்கிறாள்; இந்த சௌகந்திக மலரை அவனிடம் காண்பித்து, இப்படிப்பட்ட மலர்கள் இருக்கும் தோட்டத்துக்குச் சென்று அந்த மலர்களை எனக்கு கொண்டுவருக என்று கேட்கிறாள்;
பீமன் காட்டில், மலைகளில் அலைகிறான்; அங்கு அனுமனைப் பார்க்கிறான்; அவர் வாலை நீட்டிக் கொண்டு படுத்திருக்கிறார்; வாலை மடக்கிக் கொள்ளும்படி கேட்கிறான்; அவரோ, "என் வாலை எடுத்து சுருட்டி ஒதுக்கி வைத்துவிட்டு நீ அந்த வழியே போகலாம்" என்று அனுமன் கூறுகிறார்: அவன், அனுமனின் வாலைத் தூக்க முயற்சிக்கிறான், முடியவில்லை; அப்போதுதான் அவர் அனுமன் என்று அறிமுகம் அவனுக்குக் கிடைக்கிறது; அவரிடம் வந்த விபரத்தைக் கூறுகிறான்; அவர் குபேரனின் நந்தவனத்துக்குப் போகச் சொல்கிறார்; அங்கு சென்று, அந்த சௌகந்திக மலர்களைப் பறித்து வந்து, திரௌபதைக்கு கொடுக்கிறான்;

**

No comments:

Post a Comment