கந்தரலங்காரம்-20
கோழிக் கொடியன் அடி பணியாமற் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலி காளுங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம்
ஆழப்புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே.
(கோழியை (சேவலை) கொடியாகக் கொண்டவனை அடிபணியாமல், இந்தக் குவலயத்தில்
(உலகில்) வாழக் கருதும் மதி இல்லாதவரே, கேளுங்கள், வல்வினை என்னும் நோயால், ஊழ் வலியால் கிடைத்த
உங்களின் பெரும் செல்வத்தை உண்ணவிடாது; உங்களின் செல்வத்தை
ஆழமாகப் புதைத்து வைத்தாலும், அது உங்களின் காலடி போனபின்
(உயிர்போனபின்) உங்களுக்கு வருமோ!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-20
கோழிக்கொடியனடி பணியாமற் குவலயத்தே
வாழக்கருது மதியிலிகாளுங் கள்வல்வினைநோ
யூழிற்பெருவலியுண்ண வொட்டாதுங்களத் தமெல்லா
மாழப்புதைத்து வைத்தால்வருமோ நும்மடிப்பிறகே.
(கந்தரலங்காரம்-20)
No comments:
Post a Comment