Thursday, February 25, 2016

திருநீற்றுப் பதிகம்-2

திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகம்:

முத்திதருவது நீறு முனிவரணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர்புகழ்வது நீறு
பத்திதருவது நீறு பரவ இனியது நீறு
சித்திதருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
 
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந்தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந்தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

No comments:

Post a Comment