கந்தரலங்காரம்-12
படைபட்ட வேலவன் பால் வந்த வாகைப் பதாகை என்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதி கிழிந்து
உடைபட்ட அண்ட தடாகமும் உதிர்ந்து உடுபடல
இடைப்பட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடி பட்டவே.
(படைபட்ட ஆயுதத்தை கொண்ட முருகனிடன் வந்து
சேர்ந்து அவன் பதாகை என்னும் கொடியில் வாகை என்னும் வெற்றிச் சின்னமாக விளங்கும்
சேவல், தன் சிறகை அடித்துக்
கொள்ளும்போது, சலதி என்னும் கடல் கிழிந்து, அண்டத்தின் முகடுகள் உடைபட்டும், உடுபடலம் என்னும்
நட்சத்திர கூட்டங்களும் உதிர்ந்தன; இடையிலுள்ள குன்றுகளும்,
மகா மேரு மலையும் வெற்புகளான சிறு குன்றுகளும் இடிபட்டன.)
No comments:
Post a Comment