திருஅச்சிறுபாக்கம்
சிவன்: பாக்கேஸ்வரர்;
பார்வதி: ஆதிசுந்தர மின்னம்மை;
சிறப்பு: திரிபுராசுரரை அளிக்கும் பொருட்டு, தேவர்கள் தேராகி சிவனுக்கு
உதவினர்; தேராக இருந்து உதவியதை கர்வமாக நினைத்த தேவர்களின்
கர்வத்தை அடக்க நினைத்த சிவன், அந்த தேரின் அச்சை ஒடித்து
விட்டாராம்;
**
திருஅண்ணாமலை:
பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் இங்கு ஜோதியாக தரிசனம்
கொடுத்தார் சிவன்; இங்குள்ள லிங்கமே தேயு லிங்கம்; (தேயு=நெருப்பு);
சிவன்: அண்ணாமலையார்;
பார்வதி: உண்ணாமுலையாள்;
மாணிக்கவாசர், திருவெம்பாவையையும், திருவம்மானையும்
இங்குதான் பாடினார்; திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்
இங்குதான் பிறந்தார்;
**
திருஅம்பர் பெருந்திருக்கோயில்:
சிவன்: பிரம்புரநாதேஸ்வரர்
அம்மை: பவளவண்ணப் பூங்குழல் நாயகி;
காவிரிக் கரையில் உள்ளது;
இங்குதான், சோமாசி மாறநாயனார் பிறந்தார்;
**
திருஅம்பிலாலந்துறை:
சிவன்: சத்தியவாகேஸ்வரர்
அம்மை: சௌந்தரநாயகி;
காவிரிக் கரையில் உள்ளது;
**
திருஅரசிலி:
சிவன்: அரசிலிநாதர்;
அம்மை: பெரிய நாயகி;
அச்சிறுப்பாக்கத்துக்கு அருகில் உள்ளது:
**
திருஅரதைப் பெரும்பாழில்:
சிவன்: பாதாளேஸ்வரர்:
அம்மை: அலங்கார நாயகி:
இரணியாட்சகனைக் கொன்ற உன்மத்தம் கொண்ட வராகத்தின்
கொம்பை சிவன் ஒடித்து தனது மார்பில் அணிந்து கொண்ட தலம்;
சம்மந்தர் பாடியுள்ளார்:
**
No comments:
Post a Comment