Saturday, February 20, 2016

திருக்காளத்தி என்னும் ஸ்ரீகாளகஸ்தி

திருக்காளத்தி என்னும் ஸ்ரீகாளகஸ்தி:
திருக்காளத்தியில் அருளும் ஈஸ்வரனின் பெயர் காளத்தியப்பர்; இதுவே ஸ்ரீகாளகஸ்தி என்னும் காளாஸ்திரி; சிவன், பஞ்ச பூதங்களாக இருக்கிறான்; அதில் வாயுவாக இங்கு இருக்கிறான்; சிவலிங்கத்தின் முன்னால் உள்ள ஒரு விளக்கு எப்போதும் காற்றினால் அசைந்து கொண்டே இருக்குமாம்;
அங்கு சிவனுடன் இறைவியாக "ஞானப் பூங்கோதை" அருள்பாலிக்கிறார்;
சீ, காளம் அத்தி என மூன்றும் இங்கு சிவனை வழிபட்டதால் சீகாளகத்தி என்று பெயர் வந்ததாம்;
(சீ=சிலந்தி; காளம்=பாம்பு; அத்தி=யானை)
இந்த காளகஸ்தி காற்றுக்கு அடையாள தலமாக உள்ளது;
         (நீர் என்னும் அப்புவாக = திருவாணைக்கா சிவன்)
         (நிலம் என்னும் பிருதிவியாக= திருவாரூர் சிவன்)
         (காற்று என்னும் வாயுவாக = திருக்காளத்தி சிவன்)
         (தீ என்னும் தேயுவாக = திருவண்ணாமலை சிவன்)
         (ஆகாசம் என்னும் வெளியாக = சிதம்பர சிவன்)

 **

No comments:

Post a Comment