திருக் கஞ்சானூர்:
சிவன்: அக்கினீஸ்வரர்:
அம்மை: கற்பக நாயகி;
காவிரிக் கரையில் உள்ள தலம்;
இங்குதான், திருமணக் கோலத்தில் இருந்த மணப்பெண்ணின் கூந்தலை,
சிவன் மாறுவேடத்தில் வந்து கேட்க, அவளின்
தகப்பன் அதை அரிந்து கொடுத்தான்;
ஹரதத்தாச்சாரியார் பிறந்த இடம் இதுவே; அவர், பழுக்கக் காய்ச்சிய இருப்புப் படிவழியே ஏறி சிவனை அடைந்தார்;
**
திருக் கடம்பந்துறை:
சிவன்: கடம்பவன நாதர்;
அம்மை: முற்றிலா முலையம்மை;
நாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம்;
காவிரியின் தென்கரையில் உள்ளது;
**
திருக் கடம்பூர்க்கரகோயில்:
சிவன்: அமிர்தகடேஸ்வரர்:
அம்மை: ஜோதிமின்னம்மை;
நாவுக்கரசரும், சம்மந்தரும் பாடிய தலம்;
காவிரியின் வடகரையில் உள்ளது;
**
திருக்கடவூர்:
சிவன்: அமிர்தகடேஸ்வரர்;
அம்மை: அபிராமித்தாய்;
காவிரியின் தென்கரையில் உள்ளது:
மூவராலும் பாடப் பெற்ற தலம்;
குங்கிலிய நாயனாரும், அபிராமி பட்டரும்
இங்குதான் பிறந்தனர்;
**
திருக்கடவூர் மயானம்:
சிவன்: பிரம புரீஸ்வரர்;
அம்மை: மலர்க்குழல் மின்னம்மை;
காவிரியின் தென்கரையில் உள்ளது;
மூவராலும் பாடப் பெற்ற தலம்;
சிவனின் ஐந்து மயான தலங்களில் இதுவும் ஒன்று;
**
திருக்கடிக்குளம்:
சிவன்: கற்பகேஸ்வரர்;
அம்மை: சௌந்தரநாயகி;
கற்பகவிநாயகர், சிவனிடம் மாங்கனி பெற்ற தலம்
இதுவே;
சம்மந்தர் பாடிய தலம்;
காவிரியின் தென்கரையில் உள்ளது;
**
திருக் கடுவாய்க்கரைப் புத்தூர்;
சிவன்: சொர்ணபுரேஸ்வரர்:
அம்மை: சிவாம்பிகை;
நாவுக்கரசர் பாடிய தலம்;
காவிரியின் தென்கரையில் உள்ளது;
**
திருக்கடைமுடி:
சிவன்: கடைமுடிநாதர்;
அம்மை: அபிராமி;
சம்மந்தர் பாடிய தலம்;
சோழநாட்டில் உள்ளது;
**
திருகண்டியூர்:
சிவன்: வீரட்டானேஸ்வரர்;
அம்மை; மங்கை நாயகி;
சம்மந்தர், நாவுக்கரசரால் பாடல் பெற்றது:
பிரம்மனின் தலையை கொய்த தலம் இதுவே;
**
திருக்கண்ணார் கோயில்:
சிவன்: கண்ணாயிரேஸ்வரர்;
அம்மை: முருகுவளர் கோதை;
சம்மந்தர் பாடிய தலம்;
சோழநாட்டில் உள்ளது;
**
திருக்கைலாசபுரம்:
சிவன்: கைலாய நாதேஸ்வரர்:
அம்மை: சிவகாமி;
இங்குதான், சிவன், அகத்தியருக்கு, சிவனின் திருமணக் கோலத்தை காட்டி அருளினான்;
பாண்டி நாட்டில் உள்ள தலம்;
**
திருக்கரவீரம்:
சிவன்: வீரேஸ்வரர்:
அம்மை: பிரத்தியட்ச மின்னாள்;
சம்மந்தர் பாடிய தலம்;
காவிரியின் தென்கரையில் உள்ளது;
**
No comments:
Post a Comment