திருவாசகம்:
பக்தி இலனேனும் பணிந்திலனேனும் உன்
உயர்ந்த பைங்கழல் காணப்
பித்து இலனேனும் பிதற்றிலனேனும்
பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே
முத்தனையானே மணியனையானே
முதல்வனே முறையோ என்று
எத்தனையானும் யான் தொடர்ந்து
உன்னை இனிப்பிறந்து ஆற்றேனே!
**
“உன்மீது எனக்குப் பக்தி இல்லை என்றாலும், நான் உன்னைப் பணியவில்லை என்றாலும், உன் உயர்ந்த திருவடிகளைக் காண எனக்குப் பித்து இல்லை என்றாலும்கூட, எனக்கு இனி பிறவி இல்லாத நிலையை அருள்வாய் எம்பெருமானே!
முத்துப் போன்றவனே! மணி போன்றவனே! முதன்மையானவனே! இது முறையா என்று எத்தனை தடவை வேண்டுமானாலும் நான் பிறந்து உன்னைத் தொடர்ந்து துதிப்பேன்!
**
No comments:
Post a Comment