கந்தரலங்காரம்-25
தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழ விடுவேன் செந்தில்வேலனுக்குத்
தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாயடா அந்தகா வந்து பார் சற்று என் கைக்கு
எட்டவே.
(உன் தண்டாயுதமும், திரிசூலமும் கீழே விழ உன்னைத்
தாக்கி, திண்டாட, உன்னை வெட்டி
விழவிடுவேன் நான்; என் செந்தில்வேலனுக்குத் தொண்டாகிய
(அடிமையாகிய) எனது ஞானச் சுடர் வாள் ஆயுதத்தால்; பார்க்கலாமாடா
அந்தகா! (எமனே!) வந்து பாரடா!! சற்று, என் கைக்கு அருகில்!!!)
அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 25.
தண்டாயுதமுந்திரி சூலமும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாடவெட்டி விழவிடுவேன் செந்தில்வேலனுக்குத்
தொண்டாகிய வென்னவிரோதஞானச் சுடர்வடிவாள்
கண்டாயடாவந் தகாவந்துபார்சற் றென்கைக்கெட்டவே.
(கந்தரலங்காரம்-25)
No comments:
Post a Comment