கந்தரலங்காரம்-16
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத்
தானமென்றும்
இடுங்கோள் இருந்தபடி இருக்கோள் எழுபாரும் உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் துளைக்க வைவேல்
விடுங்கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.
(மனதைத் தடுங்கள்; கோபம் என்னும் வெகுளியை
விடுங்கள்; தானம் என்றும் இடுங்கள்; இருந்தபடியே இருங்கள்; எழுபாரும் உய்வதற்காக
கொடும் கோபச் சூருடன் குன்றத்தை துளைத்த வைரவேலை விட்ட கோனின் அருளானது நமக்கு
தானாகவே வெளிப்படுமே;) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-16;
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத்
தானமென்று
மிடுங்கோளிருந்தபடி யிருக்கோ ளெழுபாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந்திறக்கத்
துளைக்கவைவேல்
விடுங்கோ னருள்வந்து தானேயுமக்கு வெளிப்படுமே.
கந்தரலங்காரம்-16
No comments:
Post a Comment