Sunday, February 21, 2016

அம்மையும் அப்பனும்....(3)


திரு ஈய்ங்கோய்மலை:
சிவன்: மரகதாசலேஸ்வரர்;
அம்மை: மரகதவல்லி:
மாணிக்கவாசகர், சம்மந்தரால் பாடப் பெற்ற தலம்;
அகத்தியர் ஈ வடிவம் கொண்டு சென்று வணங்கிய தலம் என்பதால் இப்பெயர் பெற்றதாம்;
**
திரு உத்திரகோசமங்கை:
சிவன்: மங்களேஸ்வரர்;
அம்மை: மங்களநாயகி;
சிவன் இங்குதான் மாணிக்கவாசகருக்கு தரிசனம் கொடுத்தார்;
சிவன் இங்குதான் பார்வதிக்கு வேதங்களின் ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்தார்;
இராமநாதபுரத்துக்கு அருகில் உள்ள சிவஸ்தலம்;
**
திரு எருக்கத்தம்புலியூர்:
சிவன்: நீலகண்டநாயகர்:
அம்மை: நீலமலர்கண்ணி;
இதை நாகேந்திர பட்டணம் என்றும் சொல்வர்;
மணிமுத்தாறு நதிக்கரையில் உள்ளது;
**
திரு எறும்பியூர்:
சிவன்: எறும்பீசர்;
அம்மை: நறுங்குழல் நாயகி;
சிவனை, எறும்பு வணங்கியதால் இப்பெயர்;
காவிரிக் கரையில் உள்ள சிவஸ்தலம்;
**
திரு ஏகம்பம்:
சிவன்: ஏகாம்பரநாதர்;
அம்மை: காமாட்சி;
உமாதேவி மண்ணினால் சிவலிங்கம் செய்து பூசித்தார்; சிவன், பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தினார்; அதில் மண் லிங்கம் கரைந்துவிடும் எனக் கருதிய உமாதேவியார், மண் லிங்கத்தை தன் மார்போடு அணைத்து காத்தார்; இந்த லிங்கத்தில் அவரின் மார்பின் தழும்பு அடையாளம் தெரியுமாம்;
**
திரு ஓமாம்புலியூர்:
சிவன்: துயர்தீர்த்த செல்வர்;
அம்மை: பூங்கொடியம்பிகை;
காவிரியின் கரையில் உள்ளது'
ஒரு வேடனைப் புலி விரட்ட, அவன் இந்த இடத்தில் உள்ள ஒரு வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான்: புலி, அந்த மரத்தின் அடியிலேயே இரவு முழுவதும் காத்திருந்தது; வேடனே அந்த வில்வ மரத்தின் இலைகளை பறித்து கீழே இருந்த லிங்கத்துக்கு போட்டான்; விடியற்காலையில் புலி போய்விட்டது:
**


No comments:

Post a Comment