Saturday, February 20, 2016

சௌபரி முனிவர்


சௌபரி முனிவர்
இவர் ஒரு ரிஷி; இவர்தான் யமுனை நதியின் நீருக்கு அடியில் மூழ்கிய நிலையிலேயே பன்னிரண்டு வருடங்கள் தவம் செய்தவர்;

பன்னிரண்டு வருடத் தவத்தில் கிடைத்த பலனை அனுபவிக்க நினைத்து, நேராக மாந்தாதா என்ற மன்னனிடம் செல்கிறார்; அந்த மன்னருக்கு அதிகமான பெண்மக்கள் பிறந்தார்கள்; அவர்கள் எல்லோரும் கன்னிகைகளாக கன்னிமாடத்தில் இருக்கின்றனர்; ஒருவருக்கும் மணமாகவில்லை;

அந்த காலக்கட்டத்தில், இந்த சௌபரி முனிவர், மன்மதனைப் போல இளமையாக தன்னை உருவம் மாற்றிக் கொண்டு, மாந்தாதா மன்னனிடம் செல்கிறார்; இவ்வளவு அழகான ஆண் மகன் தன்னிடம் எதற்கு வருகிறான் என்று யோசிக்கிறார் மன்னர்; வந்தவன், தனக்கு மன்னரின் ஒரு பெண்ணை மணம் முடித்துத் தரும்படி கேட்கிறான்;

மன்னரும் ஒப்புக் கொள்கிறார்; "நீ, கன்னிமாடத்துக்கு போ; அங்கு என் மகள்களில் உனக்கு யாரைப் பிடிக்கிறதோ, அவளை அழைத்துக் கொண்டுவா; அவளை, நான் உனக்கு, மணம் முடித்துத் தருகிறேன்" என்று வாக்குறுதி அளிக்கிறார்;

இளைஞனும், மன்மத வேடத்திலேயே கன்னிமாடத்துக்குப் போகிறான்; அங்கு ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள்; ஒவ்வொருவரும் இவனைப் பார்த்து மோகம் கொள்கிறார்கள்; எல்லாப் பெண்களுமே இவனைத் திருமணம் செய்து கொள்ள முடிவும் செய்கிறார்கள்;

அவனும், எல்லாப் பெண்களையும் மணம் முடிக்க ஆசை கொள்கிறான்; எல்லோரையும் அழைத்துக் கொண்டு மன்னரிடம் வருகிறான்; மன்னர் இதை கேள்விப் பட்டு அப்படியே, அவரின் எல்லா பெண்களையும் அவனுக்கே மணம் முடித்துக் கொடுக்கிறார்; அவன் எல்லா மனைவிகளுடனும் நெடுங்காலம் வாழ்ந்தானாம்;

யமுனை நதி நீருக்குள் மூழ்கித் தவம் செய்து கிடைத்த வரம் போலும்!!!

**

No comments:

Post a Comment