கந்தரலங்காரம்-31
பொக்கக் குடிலிற் புகுதா வகை புண்டரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல் வீடு தந்தருள் சிந்து வெந்து
கொக்குத் தறிபட்டு தெறிபட்டு உதிரம் குமுகுமு
எனக்
கக்கக் கிரி உருவக் கதிர்வேல் ஒட்ட காவலனே.
(இந்தப் பொய்யான குடில் என்னும் உடம்பில் புகாத
வகையில். புண்டரீகம் என்னும் தாமரை மலரினும் செக்கச் சிவந்த கழல் வீடான முக்தியை
தந்து அருள்செய்வாய்; சிந்து வெந்து பொங்கவும், கொக்கு தறியில் பட்டு,
எறிபட்டு, ரத்தம் குமு குமு என கக்கிக் கொட்ட, மலையை ஊடுருவிச் செல்லும்
கதிர்வேல் தொட்ட (கையில் வைத்திருக்கும்) காவலனே!) அருணகிரிநாதர் அருளிய
கந்தரலங்காரம் பாடல் 31
பொக்கக்குடிலிற் புகுதாவகை புண்டரீகத்தினுஞ்
செக்கச்சிவந்தகழல்வீடு தந்தருள்சிந்துவெந்து
கொக்குத் தறிபட்டெறிபட்டுதிரங்கு முகுமெனக்
கக்கக்கிரியுருவக் கதிர்வேறொட்ட காவலனே.
(கந்தரலங்காரம்-31)
No comments:
Post a Comment