கந்தரலங்காரம்-29
கடத்திற் குறத்தி பிரான் அருளாற் கலங்காத சித்தத்
திடத்திற் புணையென யான் கடந்தேன் சித்ர மாதர்
அல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்த செவ்வாயிற் பணையில்
உந்தித்
தடத்திற் தனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.
(குறத்தியின் பிரானான முருகப்பெருமான் அருளால், கலங்காத சித்தத்தில்
(உள்ளத்தில்) புணை என்னும் தெப்பமாக நான் கடந்தேன்; அழகிய
மாதர் அல்குல், கழுத்து, பழுத்த
செவ்வாய், பணை என்னும் தோள்கள், உந்தித்
தடாகம், தனம் என்னும் கொங்கைகள், இவைகளில்
இருக்கிற வெம்மை என்னும் காம சமுத்திரம் என்னும் கடலை கடந்தேன்;) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 29
கடத்திற்குறத்தி பிரானருளாற் கலங்காதசித்தத்
திடத்திற்புணையென யான்கடந்தேன் சித்ரமாதரல்குற்
படத்திற்கழுத்திற் பழுத்தசெவ்வாயிற்
பணையிலுந்தித்
தடத்திற்றனத்திற் கிடக்கும் வெங்காமசமுத்திரமே.
கந்தரலங்காரம்-29
No comments:
Post a Comment