திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகம்:
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத்தோர்களுக்
கெல்லாம் ஆசைகெடுப்பது நீறு வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
அருத்தமதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு புண்ணியர்பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகைசூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
No comments:
Post a Comment