Sunday, February 21, 2016

அம்மையும் அப்பனும்....(2)


திரு அழுந்தூர்:
சிவன்: வேதபுரேஸ்வரர்:
அம்மை: சௌந்தராம்பிகை;
காவிரிக் கரையில் உள்ளது:
சம்மந்தரால் பாடப்பட்ட தலம்;
**
திரு அன்னியூர்:
சிவன்: ஆபத்சகாயேஸ்வரர்:
அம்மை: பெரியநாயகி;
காவிரிக் கரையில் உள்ளது:
நாவுக்கரசராலும், சம்மந்தராலும் பாடப் பெற்ற தலம்;
**
திரு ஆய்ப்பாடி:
சிவன்: பாலுகந்தார்;
அம்மை: பெரிய நாயகி;
காவிரிக் கரையில் உள்ளது;
நாவுக்கரசராலும், ஐயடிகள் காடவர் கோனாலும் பாடப் பெற்றது;
**
திரு ஆவூர்ப் பசுபதீஸ்வரம்:
சிவன்: பசுபதீஸ்வரர்:
அம்மை: மங்கள நாயகி;
சம்மந்தரால் பாடப்பட்ட தலம்;
**
திரு இடும்பாவனம்:
சிவன்: சற்குண நாதேஸ்வரர்:
அம்மை: மங்கள நாயகி;
சம்மந்தரால் பாடப் பெற்ற தலம்;
**
திரு இடைச்சுரம்:
சிவன்: இடைச்சுர நாதர்:
அம்மை: இமயமடக்கொடி;
சம்மந்தரால் பாடப் பெற்ற தலம்;
**
திரு இராதாபுரம்:
சிவன்: வரகுணபாண்டியேஸ்வரர்:
அம்மை: நித்திய கல்யாணி;
காட்டில் வேட்டையாடித்திரிந்த வரகுணபாண்டிய மன்னனுக்கு சிவன் காட்சி தந்த தலம்;
**
திரு இராமனதீஸ்வரம்:
சிவன்: இராமநாதேஸ்வரர்;
அம்மை: கருவார்குழலி;
சம்மந்தர் பாடிய தலம்;
காவிரிக் கரையில் உள்ளது;
**
திரு இராமேசநல்லூர்:
சிவன்: இராமநாதேஸ்வரர்:
அம்மை: குணக்குன்று நாயகி;
தாமிரணவருணி ந்திக்கரையில் உள்ளது;\
**
திரு இராமேஸ்வரம்:
சிவன்: இராமநாதர்;
அம்மை: பர்வத வர்த்தினி;
ஸ்ரீராமர், தன் கையால் மணலை லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கத்தை உடைய தலம் இது;
கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டுவந்து இந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்கள்:
**
திரு இரும்பூளை:
சிவன்: காசியாரணியேஸ்வரர்:
அம்மை: ஏலவார் குழலி;
சம்மந்தர் பாடிய தலம்:
இதற்கு ஆலக்குடி என்றும் பெயர்;
**
திரு இரும்பைமாகாளம்:
சிவன்: மாகாளேஸ்வரர்:
அம்மை: குயின்மொழி;
மாகாளர் வணங்கிவந்த தலம் என்பதால் இப்பெயர்;
**
திரு இலம்பையங் கோட்டூர்:
சிவன்: சந்திரசேகரேஸ்வரர்;
அம்மை: கோடேந்து முலையம்மை;
சம்மந்தரால் பாடல் பெற்ற தலம்;
காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ளது;
**


No comments:

Post a Comment