கந்தரலங்காரம்-17
வேதஆகம சித்ர வேலாயுதன் வெட்சி பூத்த தண்டைப்
பாதார விந்த அரணாக அல்லும் பகலும் இல்லாச்
சூதான தற்ற வெளிக்கே ஒழித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாதொரு பூதர்க்குமே.
(வேதமும், ஆகமமும், புகழ்கின்ற அழகிய (சித்ர)
வேலாயுதன், வெட்சி மலர் பூத்த தண்டை என்னும் கால் அணிகலனை அணிந்த, அடி முடி
தெரியாத அரணாகக் கொண்டு, அல்லும் பகலும் இல்லாத, சூது அற்ற பிரபஞ்ச வெளியில், எல்லாம்
ஒழித்து சும்மா இருக்கும் நிலையில் இருப்பாய் இனி மனமே; இது ஒரு பூதருக்கும்
தெரியாது;) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-17
வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
பாதாரவிந்த மரணாகவல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொழித்துச் சும்மாவிருக்கப்
போதாயினி மனமேதெரியாதொரு பூதர்க்குமே.
(கந்தரலங்காரம்-17)
No comments:
Post a Comment