கந்தரலங்காரம்-35
பத்தித் துறை இழிந்து ஆனந்த வாரி படிவதினான்
புத்தித் தரங்கம் தெளிவது என்றோ பொங்கு
வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூரனை விட்ட சுட்டியிலே
குத்தித் தரங்கொண்டு அமராவதி கொண்ட கொற்றவனே.
(பக்தித் துறையில் மூழ்கி ஆனந்தவாரி படிவதினால்,
புத்தியின் தரம் தெளிவாவது எப்போது! பொங்கும் வெம்மையான குருதி (சூடான ரத்தம்) குதிகொள்ள,
வெம்மையான சூரனை, நீ விட்ட வேலாயுத்தால் குத்தித் தரங்கொண்டு, அமராவதி என்னும்
இந்திரனின் சொர்க்க நகரத்தை கொண்ட மன்னவனே!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப்
பாடல் 35.
பத்தித்துறையிழிந் தானந் தவாரிபடிவதினான்
புத்தித் தரங்கந் தெளிவதென்றோ பொங்கு வெங்குருதி
மெத்திக்குதிகொள்ள வெஞ்சூரனை விட்ட சுட்டியிலே
குத்தித் தரங்கொண் டமராவதி கொண்ட கொற்றவனே.
(கந்தரலங்காரம்-35)
**
No comments:
Post a Comment