Saturday, February 20, 2016

ஜகநாதம்

ஜகநாதம்
ஜகநாதம் என்பது ஒட்டர தேசத்தில் உள்ள விஷ்ணுதலம்; (ஒட்டர தேசம் என்பது இப்போதுள்ள ஒரிஸ்ஸா);
ஸ்ரீகிருஷ்ணன் இங்கு பூமிக்கு வந்த வேலை முடிவடைகிறது; அவன் இறக்கிறான்; இறைவன் எப்படி இறக்க முடியும்? எனவே ஸ்ரீகிருஷ்ணன் நிரியாணம் ஆகிறான்; (Death of HIS human body);
ஸ்ரீ கிருஷ்ணன் இறந்து விட்டானா?
இறைவனுக்கு இறப்பில்லை; ஆனால், கிருஷ்ணன், இங்கு மனிதனாக அவதாரம் எடுத்தவன்; இறப்பு என்பது கட்டாயம் நிகழ வேண்டிய ஒன்றுதானே?
*******
மகாபாரதப் போர் முடிகிறது: எல்லோரும் இறந்து விட்டனர்; ஆண் வர்க்கம் என்று சொல்ல யாருமே இல்லை; எல்லா ஆண்களின் மனைவிகளும் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களின் கணவன் போரில் இறந்து விட்டனர்; 100 மகன்களைப் பெற்ற திருதராஷ்டிரனுக்கும் மகன்கள் யாருமே உயிருடன் இல்லை; அவர்களின் மனைவிகள் அனைவரும் கணவர் இல்லாத பெண்கள் ஆகிவிட்டனர்; திருதராஷ்டிரன் மனைவி, காந்தாரியை பார்த்து ஆறுதல் சொல்ல கிருஷ்ணன் அரண்மனைக்கு வருகிறான்; அவனைப் பார்த்தவுடன், காந்தாரிக்கு கோபம் உச்சிக்கு செல்கிறது; என் மகன்கள் ஒருவர் கூட உயிருடன் இல்லை; அவர்களின் மனைவிகள் எல்லோரும் கணவர் இல்லாமல் வாழும் நிலையை, நீதானே செய்துவிட்டாய் கிருஷ்ணா!! உன் வம்சமும் அப்படியே ஆண் வாரிசுகள் இல்லாமல் அவர்களின் மனைவிகள் கைப்பெண்களாகவே இருக்கக் கடவது!! என்று ஒரு பெரும் சாபத்தைக் கிருஷ்ணனுக்குக் கொடுத்து விட்டாள்;
******
அதேபோல், 30 வருடங்கள் கழித்து, யாதவர்களுக்குள் சண்டை வந்து, அதில் எல்லா ஆண்களும் அழிகிறார்கள்: அவர்கள் மனைவிகள் கைப் பெண்களாகிறார்கள்: பத்தினி சாபம் நிறைவேறுகிறது:
எல்லாம் முடிந்தது...... காட்டில் எங்கோ அலைந்து திரிகிறான் கிருஷ்ணன்; மண்ணில் புரண்டு படுத்திருக்கிறான்; அவனின் நேரம் நெருங்கிவிட்டது: மண் தரையில் படுத்துக் கொண்டு, கால் மேல் கால் போட்டு, கவலையில், யோசனையில் ஆழ்கிறான்; அதை ஒரு வேடன் பார்க்கிறான்; காட்டுச் செடியின் மறைவில் கிருஷ்ணனின் ஒரு கால் கட்டை விரல் மட்டுமே தெரிகிறது; ஏதோ பறவைதான் என்று நினைத்த வேடன், தன் அம்பை எய்கிறான்; அது கிருஷ்ணனின் கால் கட்டை விரலை குத்திப்பாய்கிறது; ரத்தம் பீச்சுகிறது; கிருஷ்ணனின் மானிடப் பிறவி முடிகிறது;
********
துவாரகையில் கிருஷ்ணனின் உடல் எரியூட்டப்படுகிறது; அதைப் பொறுக்க மாட்டாத சமுத்திரம் (கடல்), கோபத்தில் கொந்தளித்துப் பொங்கி எழுகிறது: அவ்வாறு எழுந்த கடல் அலைகள் துவாரகை வரை சென்று மூடியதுதாம்; பாதி எரிந்த நிலையில் இருக்கும் பகவான் கிருஷ்ணனின் உடலின் பகுதிகளை வாரிக் கொள்கிறது: அப்படியே சேர்த்து எடுத்துக் கொண்டு சென்ற கடல் அலைகள், அதை ஒட்டர தேசத்தில் ஜகநாதத்தில் சேர்க்கிறதுஅங்கிருப்பவர்கள் இந்த உடலின் பகுதியை கண்டு, அது கிருஷ்ணனே என உணர்ந்து, அதை ஒரு ஆலமரத்தில் சபுடீகரணம் பண்ணி விட்டனர்: பின்னர் அந்த மரத்தை விக்கிரமாக்கி அங்கேயே கிருஷ்ணனை ஸ்தாபித்தனர்;
அதுவே இப்போதுள்ள உலகப் புகழ்பெற்ற பூரி ஜகநாதர் கோயில்; இங்கிருக்கும் கிருஷ்ணனுக்கு "நீலமாதவர்" என்று பெயர்;


No comments:

Post a Comment