கந்தரலங்காரம்-37
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக் கள்ளை
மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன் முது
கூளித்திரள்
டுண் டுண்டு டுடுடு டூடூடூ டுடுடு டுண் டுடு
டுண்டு
டிண் டிண் எனக் கொட்டியாட வெஞ்சூர்க் கொன்ற
ராவுத்தனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப் பாடல் 37)
(கண்டு என்னும் கற்கண்டை உண்டதைப் போன்ற சொல்லை
உடையவர், மெல்லியர் என்னும்
மென்மையானவர், காமம் என்னும் கலவிப் புணர்வான கள்ளை (மது)
மொண்டு உண்டு அறிவு மயங்கி அயர்ந்தாலும் வேலாயுதத்தை மறவேன்; முதுகூளி திரள் என்னும் முதிய பெண்பேய்கள் "டுண் டுண் டுடு
டூடூ" என்று கொட்டி ஆட, வெம்மையான சூரனைக் கொன்ற
ராவுத்தனே!)
(கந்தரலங்காரம் பாடல் 37)
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக் கள்ளை
மொண்டுண்டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண்டு டுடுடு டூடூடூ டுடுடு டுண்டுடுடுண்டு
டிண்டிண்டெனக் கொட்டியாட வெஞ்சூர்க்
கொன்றராவுத்தனே.
No comments:
Post a Comment