கந்தரலங்காரம்-28
வேலே விளங்கும் கையான் செய்ய தாளினில் வீழ்ந்து
இறைஞ்சி
மாலே கொள இங்ஙன் காண்பதல்லான் மனவாக்குச் செய
லாலே அடைதற் கரியதாய அரு வுருவாகி யொன்று
போலே யிருக்கும் பொருளை யெவ்வாறு புகல்வதுவே.
(வேலாகவே விளங்கும் கையை உடையவன் செய்ய தாளினில்
(காலடியில்) விழுந்து வணங்கி அவன் அன்பைப் பெறுவதே இங்கு காண்பதற்குறிய வழியாகும்; அல்லாமல், மனம், வாக்கு, செயல், இவைகளால் அடைவதற்கு அரியதாகிய, அருவமும், உருவமும் ஒன்று போலவே இருக்கும் பொருளை (பரமத்தை) வேறு எவ்வாறு புகல்வது!)
அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 28
வேலேவிளங்குகை யான்செய்ய தாளினில்வீழ்ந் திறைஞ்சி
மாலேகொள விங்ஙன்காண்பதல்லான் மனவாக்குச் செய
லாலேயடைதற் கரியதாயரு வுருவாகியொன்று
போலேயிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே.
கந்தரலங்காரம்-28
No comments:
Post a Comment