Saturday, February 27, 2016

கந்தரலங்காரம்-15

கந்தரலங்காரம்-15

தாவடி ஓட்டு மயிலும் தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ படி மாவலி பான்
மூவடி கேட்ட அன்று மூதண்டம் கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமாண் மருகன் சிற்றடியே.

(தாவி அடியெடுத்து ஓடும் மயில் மீதும், தேவர்களின் தலையிலும், என் பாட்டின் ஏட்டிலும், பட்டதன்றோ உன் சிற்றடிகள்; மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டு, மூது அண்டத்தின் உச்சியை முட்டும்படி காலை வைத்து அளந்த பெருமானின் மருமகனான முருகா உனது சிறிய கால் அடியே!!) (அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம்-15)

தாவடியோட்டு மயிலுந் தேவர் தலையிலுமென்
பாவடியேட்டி லும்பட்டதன்றோ படிமாவலிபான்
மூவடிகேட்டன்று மூதண்டகூடமுகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமாண்மருகன் சிற்றடியே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம்-15)


No comments:

Post a Comment