கந்தரலங்காரம்-19
சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் துளைத்த வைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப மௌனத்தை உற்று
நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய
நிர்க்குணம் பூண்ட
என்னை மறந்து இருந்தேன் இறந்தே விட்டது
இவ்வுடம்பே.
(தங்கம் என்னும் சொர்ண கிரௌஞ்ச மலையையே ஊடுருவித்
துளைத்த வைரவேல் கொண்ட மன்னனே! கடம்ப மரத்தின் மலர்மலையை அணிந்த மார்பை உடையவனே!
மௌனத்தை உற்றுநோக்கி, உன்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கி (ஒடுங்கி)
நிர்க்குணம் கொண்டேன்; என்னையே மறந்து இருந்தேன்; இந்த என் உடம்பு இறந்தே விட்டதே;)
அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-19.
சொன்ன கிரௌஞ்ச கிரியூடுருவத்
துளைத்தவைவேல்
மன்னகடம்பின் மலர்மாலைமார்ப
மௌனத்தையுற்று
நின்னையுணர்ந்
துணர்ந்தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண்
டென்னைமறந்
திருந்தேனிறந்தேவிட்ட திவ்வுடம்பே.
கந்தரலங்காரம்-19
No comments:
Post a Comment