Saturday, February 20, 2016

தெய்வங்கள்

வேதம் என்ற தமிழ்ச் சொல், "வித்" என்ற சமஸ்கிருதச் சொல்லடியில் இருந்து தோன்றி இருக்கலாம்; வித் என்றால் "அறிதல்" என்று பொருளாம்;
அறிவின் இரு வகைகள்:
அறிவில் இரண்டு வகைகள் உண்டு; தன் வாழ்க்கையை இனிதாக வாழ்வதற்கு, உலகில் உள்ள பொருள்களை எல்லாம் எவ்விதமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவது ஒரு வகை;
மற்றொன்று, இந்த வாழ்க்கையும், இந்த உலகமும் எதற்காக என்பதை அறிவது இரண்டாவது வகை; இந்த இரண்டாவது அறிவுக்குத் தேவைப்படுவதே வேதங்கள்;
வேதங்கள்:
வேதங்கள் மனிதரால் செய்யப்பட்டவை அல்லவாம்; எனவே அதை "எழுதாமறை" என்று கூறுகின்றனர்; இறைவனால் சொல்லி கேட்கப்பட்டவையே வேதம் என்கின்றனர்; அதனால்தான் இதை "சுருதி" என்கின்றனர்; சுருதி என்றால் "காதால் கேட்டது" எனப் பொருளாம்; குரு, தன் சீடனிடம் சொல்லி, அதைக் கேட்ட சீடன், தன் சீடனுக்குச் சொல்லி, இவ்வாறு வழிவழியாக வந்தவையே வேதம் ஆகும்;
இந்த வேதங்களில் கூறப்படும் மந்திரங்கள், இயற்கையாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றைத் தெய்வங்கள் ஆக்கி, அவற்றுக்குச் செய்யும் வழிபாடுகளே!
இவையல்லாமல், மின்னல் முழக்கம், முகில், மழை, கடல் இவைகளையும் தெய்வங்களாக ஆதிமனிதன் கருதினான்; தனக்கு எந்தவித கேடும் செய்ய வேண்டாம் என இந்த தெய்வங்களை வேண்டிக் கொள்வான்; மாறாக, தனக்கு நன்மைகளை செய்யும்படி இந்த தெய்ங்களை வேண்டிக் கொள்வான்;
அக்கினி ஒரு தெய்வம்:
அக்கினியும் ஒரு தெய்வம்; மற்ற தெய்வங்களுக்கு, மனிதன் படைக்க வேண்டிய பொருட்களை அவைகளிடம் சேர்ப்பதற்கு, இந்த அக்கினி கடவுள்தான் உதவி செய்கிறார்; அதனால்தான், எந்தத் தெய்வத்துக்கு கொடுக்கும் பொருளையும், இந்த அக்கினியில் போட்டு அதன்மூலம் மற்ற தெய்வங்களுக்குச் சேர்க்கிறான்;
மனிதன் ஒழுக்கம் தவறினால், தெய்வத்தின் சீற்றத்திற்கு ஆளாகிறான்; எந்த தவறையும் தெய்வத்திடமிருந்து மறைக்க முடியாது என மனிதன் நம்புகிறான்; ஒழுக்கத்திற்கு தெய்வமாக வருணன் இருக்கிறான்;
தெய்வங்களில் பல பிரிவுகள்:
தெய்வங்களை மூன்று பெரிய பிரிவுக்குள் அடக்கினர்:
விண்ணுக்குறிய ஒரு பிரிவு; இதில் வருணன், மித்திரன், போன்றவர் இருப்பர்;
மண்ணுக்குறியவை மற்றொரு பிரிவு; இதில் அக்கினி அடங்கும்:
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே வாயு மண்டலம் மூன்றாவது பிரிவாகும்; இதில் இந்திரன், வாயு போன்றோர் அடங்குவர்;
 (நன்றி: தத்துவ ஞான சிந்தனை நூலிலிருந்து)



No comments:

Post a Comment