திருமந்திரம்
சிவனொடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரு மல்லை
புவனங் கடந்தன்று பொன் ஒளி மின்னும்
தவளச் சடைமுடித் தாமரை யானே!
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமானது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே!
**
No comments:
Post a Comment