ஜய-விஜயர்
வைகுண்டத்து வாசலில் இரண்டு பாதுகாவலர்கள்
இருக்கிறார்கள்; அவர்கள்
இருவரையும் துவாரபாலகர்கள் என்று அழைப்பர்; இவர்களின் அனுமதி
இல்லாமல் யாரும் வைகுண்டத்துக்குள் நுழைந்துவிட முடியாது;
ஒருநாள், ஜயர் -விஜயர் என்ற இருவரும் யாருக்கும் தெரியாமல்
வைகுண்டத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற திட்டமிட்டு, ஜயர்-விஜயர்
இருவரும் மிக மிகச் சிறிய உருவங்களாக தங்களை உருவம் மாற்றிக் கொண்டு, வைகுண்ட வாசலுக்குள் புகுந்தனர்; ஆனாலும் உள்ளே
போனவுடன், காவலுக்கு நின்ற துவார பாலகர்களிடம் மாட்டிக்
கொண்டனர்; தவறு செய்த அவர்கள் இருவரையும் ராட்சசர்கள்
ஆகும்படி சபித்தனர் துவார பாலகர்கள்;
அதனால், ஒரு பிறவியில், இருவரும்
இரணியன், இரணியாட்சகன் என்று பிறவி எடுத்தனர்;
அதன் அடுத்த பிறவில், இராவணன், கும்பகர்ணன் என பிறவி எடுத்தனர்;
அதன்பின், மூன்றாவது பிறவில், சிசுபாலன்,
தந்தவக்திரன் என பிறவி எடுத்தனர்;
இந்த மூன்று பிறவிகளிலும், விஷ்ணுவின் அவதாரங்களாலேயே
இவர்கள் மடிந்தனர்;
கடைசியாக அவர்கள் ஆசைப்பட்ட வைகுந்தம் வந்து
சேர்ந்தனராம்:
**
No comments:
Post a Comment