Sunday, February 21, 2016

அம்மையும் அப்பனும்...(5)

திருக்கரிவலம்வந்த நல்லூர்:
சிவன்: பால்வண்ண நாதர்;
அம்மை: ஒப்பிலாம்பிகை;
பாண்டி நாட்டில் உள்ள சிவஸ்தலம்;
பாண்டிய மன்னர் குலசேகரபாண்டியன் வேட்டைக்கு போகும்போது, ஒரு யானைத் துரத்த, அது ஓடிச் சென்று, ஒரு லிங்கம் இருக்கும் புதரைச் சுற்றி, மறைந்து சிவகணம் ஆனது இந்த தலத்தில்தான்;
**
திருக்கருகாவூர்:
சிவன்: முல்லைவனநாதர்;
அம்மை: கரும்பனையாள்;
சம்மந்தர் பாடிய தலம்;
**
திருக்கருக்குடி:
சிவன்: சற்குண லிங்கேஸ்வரர்:
அம்மை: சர்வாலங்கிருத மின்னம்மை;
காவிரியின் தென்கரையில் உள்ளது;
இதுவே வலங்கைமான் எனப்படும்;
சம்மந்தர் பாடிய தலம்;
**
திருக்கருப்பறியலூர்:
சிவன்: குற்றம்பொறுத்த நாதர்;
அம்மை: கோவல்வளை நாயகி;
இதுவே ஞாயிறு என்றும் பெயர்;
சோழநாட்டில் உள்ள சிவஸ்தலம்;
சிவன், பூதவடிவில் இருக்கும்போது, அதை அறியாமல், இந்திரன் தாக்க எத்தனிக்கிறான்; உடனே சிவனுக்கு கோபம் வந்தது; இந்திரன், தன்னை மன்னித்து பொறுத்துக் கொள்ளும்படி கேட்கிறான்; கோபம் பொறுத்ததால் சிவனுக்கு இப் பெயர் ஏற்பட்டதாம்;
சுந்தரரும், சம்மந்தரும் பாடிய தலம்;
**
திருக்கருவிலி:
சிவன்: சற்குணேஸ்வரர்:
அம்மை; சர்வாங்க நாயகி;
காவிரியின் தென்கரையில் உள்ளது;
நாவுக்கரசரால் பாடப்பட்ட தலம்;
**
திருக் கருவூர்த்திருவாநிலை:
சிவன்: பசுபதீஸ்வரர்;
அம்மை; கிருபாநாயகி;
இதை கருவூர் என்பர்;
கொங்கு நாட்டில் உள்ளது;
பிரம்மா, சிருஷ்டி தொழிலை மறந்து இருந்தபோது, காமதேனு அந்த வேலையைச் செய்து வந்தது; காமதேனு பசு இந்த வேலையைச் செய்ததால், ஆநிலை எனப் பெயர் பெற்றது;
கருவூர்தேவர் இங்குதான் பிறந்தார்; இவர், நினைத்த நேரத்தில் மழை பொழியும், வெயில் அடிக்கும்; இவரே திருவிசைப்பா பாடியவர்;
இங்கு பல அளவில்லா நிகழ்வுகள் நடந்திருக்கின்றன;
**
திருக்கழுகுன்றம்:
சிவன்: வேதகிரீஸ்வரர்;
அம்மை: பெண்ணினல்லாள்;
சிவபெருமான் வாக்குக்கு எதிர்வாதம் செய்த இரண்டு துறவிகள் கழுகாக மாறி, அங்கு சுற்றித் திரிந்து, சிவனை வழிபட்டு வருகின்றனர்;
மாணிக்கவாசகருக்கு குருவைக் காட்டிய இடம் இதுதான்; "காட்டினாய் கழுக்குன்றிலே..." என்று பாடி உள்ளார்; மூவராலும் பாடப் பெற்ற தலம்;
**
திருக்களக்காடு:
சிவன்: சகலபுவனேஸ்வரர்:
அம்மை: உமாதேவி;
பாண்டி நாட்டில் உள்ளது;
**
திருக் கற்குடிமலை:
சிவன்: முத்தீஸ்வரர்;
அம்மை: அஞ்சனாட்சி;
காவிரியின் தென்கரையில் உள்ளது;
மூவராலும் பாடப் பெற்ற தலம்:
**
திருக் கன்றாப்பூர்:
சிவன்: நடுதறியப்பர்;
அம்மை: மாதுமை நாயகி;
வைஷ்ணவப் பெண் சிவனை வழிப்பட்டு வந்தாள்: அவள் கணவன் அந்த சிவலிங்கத்தை கிணற்றில் எறிந்துவிட்டான்: அவளோ, பசுவின் கன்றைக் கட்டும் முளைக்குச்சியை லிங்கமாக நினைத்து வழிபட்டாள்; சிவனும், அவளுக்கு பசுவின் கன்றுத் தறியில் காட்சி தந்தான்;
நாவுக்கரசர் பாடிய தலம் இது;
**
திருக்காசிபேச்சுரம்:
சிவன்: எரித்தாள் உடையார்;
அம்மை: சிவகாமி;
இதை அம்பாசமுத்திரம் என்பர்;
சிவனின் பொருளை களவாடிச் சென்று பொய் சத்தியம் செய்தவனான சிவசர்மனை எரித்து அவனை ஆட்கொண்டார்; அதனால் இப்பெயர் ஏற்பட்டது;
**



No comments:

Post a Comment