கந்தரலங்காரம்-38
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி
வந்த
கோள் என்செயும் கொடும் கூற்று என் செயும்
குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்
சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்துதோன்றிடினே.
(நாள் என்னை என்ன செய்து விடும்! வினை தான் என்னை
என்ன செய்துவிடும்! என்னை சுற்றும் கோள்தான் என்ன செய்துவிடும்! கொடுமையான
கூற்றவன் என்னை என்ன செய்ய முடியும்! குமரேசனின் இரு பாதங்களும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகம்
என்னும் ஆறு முகங்களும், தோளும், கடம்பு
மாலையும், எனக்கு முன்னே வந்து தோன்றிடும்போது!)
நாளென்செயும் வினைதானென்செயு மெனைநாடிவந்த
கோளென்செயுங் கொடுங்கூற்றென் செயுங் குமரேசரிரு
தாளுஞ்சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்புமெனக்கு முன்னே வந்துதோன்றிடினே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 38)
No comments:
Post a Comment