பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
(திருநாவுக்கரசரின் நமச்சிவாயத் திருப்பதிகம்)
பூக்களுக்குள் அருமையான ஆபரணமாவது பொங்கு தாமரை; ஆ என்னும்
பசுக்களுக்கு அருமையான ஆபரணமாவது ஐந்து பொருள்களான பஞ்சகவ்வியம் என்பவற்றை
சிவனுக்குக் கொடுப்பது; கோ என்னும் அரசனுக்கு ஆபரணமாவது கோட்டம் (குறை) இல்லாத ஆட்சி
செய்வது; நமது நா என்னும் நாக்குக்கு ஆபரணமாவது “நமசிவாய” என்னும் நாமத்தை
சொல்வதே!
**
No comments:
Post a Comment